எஸ்சிஓ பிளஸ் கூட்டத்தில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை

Estimated read time 1 min read

செப்டம்பர் முதல் நாள் பிற்பகல் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிளஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங், “சமத்துவமான மற்றும் ஒழுங்கமைவான உலக பலதுருவமயமாக்கத்தைக் கூட்டாக ஆதரப்பதும், மேலும் நீதியான மற்றும் நியாயமான உலகளாவிய ஆட்சிமுறையை நனவாக்குதலும் ”என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், ஐ.நாவின் பங்களிப்பை வலுப்படுத்துதல், பலதுருவமான உலகத்தை கட்டியமைத்தல் ஆகியவற்றில் இக்கூட்டம் கவனம் செலுத்துவது ஆகியவை, உலகளாவிய ஆட்சிமுறையை மேம்படுத்துவதிலும் சீர்த்திருத்தம் மேற்கொள்வதிலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் காலப்பொறுப்பை வெளிக்காட்டுகின்றது என்றார். கடந்த சில ஆண்டுகளில், உலகளாவிய தெற்கு நாடுகளின் ஆற்றல் விரைவாக வலுவடைந்துள்ளதாகவும், உலக பலதுருவமயமாக்கத்தின் வளர்ச்சிப் போக்கு மாற்ற முடியாதது என்றார். இந்நிலைமையில், உலகிற்கு எத்தகைய பலதுருவமயமாக்கம் தேவை? நாடுகள் எவ்வாறு பலதுருவமயமாக்கத்தில் பங்கேற்று அதை ஊக்குவிக்க வேண்டும்? இது குறித்து சர்வதேச சமூகம் ஒருமித்த கருத்தை எட்டி, சரியான தேர்வை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பங்களிப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்வது பற்றிய  மூன்று முன்மொழிவுகளை ஷிச்சின்பிங் வழங்கினார்.

முதலாவது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆற்றலின் மூலம், யூரேசியா கண்டத்தின் செழுமை மற்றும் கூட்டு வளர்ச்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

இரண்டாவது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஞானத்தின் மூலம், உலகளாவிய தெற்கு நாடுகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும்.

மூன்றாவது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செயல்பாடுகளின் மூலம், உலகளாவிய ஆட்சிமுறையின் மேம்பாட்டிற்கு வழிகாட்ட வேண்டும் என்று இந்த மூன்று முன்மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author