ஜூன் மாதத்தில் உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறியீடு வெளியீடு

சமீபத்திய உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறியீடு, சர்வதேச வர்த்தக மேம்பாட்டிற்கான சீனக் கவுன்சில் ஆகஸ்ட் 31ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. 2026ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில், 102ஆக இருந்த இந்த குறியீடு உயர் நிலையில் உள்ளது. நாடுகள் வாரியான குறியீட்டின்படி, கண்காணிக்கப்பட்ட 20 நாடுகள் மற்றும் பிரதேசங்களில், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

இக்கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஒருதரப்பு தடைகள், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட வர்த்தகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றும், இதன் விளைவாக அந்நாட்டின் உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மதிப்பு தொடர்ந்து 7 மாதங்களாக முதலிடம் பிடித்தது என்றும் தெரிவித்தார்.

மேலும், தொழில்துறை வாரியான குறியீடு ரீதியில், கண்காணிக்கப்பட்ட 13 முக்கிய தொழில்துறைகளில், மின்னணுவியல் துறையின் குறியீடு மிக உயரம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

More From Author