இன்று முதல் பால்கோவா விலை உயர்வு அமல்..!!

Estimated read time 1 min read

ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விலை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 1 கிலோ பால் கோவா ரூ.360-ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.40 விலை உயருகிறது. மேலும் பால் அல்வா ரூ.400-ல் இருந்து ரூ.450 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

பால்கோவாவில் இருந்து தயாரிக்கப்படும் பால் கேக் மற்றும் திரட்டி பால் போன்றவை விலையும் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிப்பு தொழிலில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக தயாரிக்கப்படும் பால்கோவா 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தற்போது சீனி விலை அதிகரித்து உள்ளது. இதனால் பால் கோவா விலையை உயர்த்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.

You May Also Like

More From Author