இறைவனை கைகூப்பி வணங்கி மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய்!

Estimated read time 1 min read

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்த பின், மேட்டூரில் இருந்து புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது.இதனால் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால், குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கடந்த 4-ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.56 அடியாகவும், நீர் இருப்பு 54.45 டிஎம்சியாகவும் உள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பாக, சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீரை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார். இறைவனை கைகூப்பி வணங்கி விட்டு, மலர் தூவி மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்.

You May Also Like

More From Author