சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் எகிப்தில் அரசு முறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீன-எகிப்து தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மானுடப் பண்பாட்டு பரிமாற்ற நடவடிக்கை, உள்ளூர் நேரப்படி, செப்டம்பர் முதல் நாள், அந்நாட்டின் தலைநகர் கைய்ரோவில் நடைபெற்றது.
சீன ஊடக குழுமமும் எகிப்து செய்தி துறை அமைச்சகமும் கூட்டாக நடத்திய இந்நடவடிக்கைக்கு, எகிப்து அரசுத் தலைவர் அப்தல் ஃபாடாஹ் அல் சிசி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
இரு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேலான விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர். அவர்களின் முன்னிலையில் பல ஊடக ஒத்துழைப்பு சாதனைகள் வெளியிடப்பட்டன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங் உரை நிகழ்த்துகையில்,
இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, சீன-எகிப்து நட்புறவை ஆழமாக்குவதற்கான விரிவான செயலாக இந்நடவடிக்கை திகழ்கிறது.
எகிப்தின் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளை சீன ஊடக குழுமம் தொடர்ந்து ஆழமாக்கி வருவதன் மூலம் சீன-எகிப்து நட்புறவு மேலும் சீராகவும் நிதானமாகவும் வளரும் என்று தெரிவித்தார்.
