உலக ஆட்சிமுறையின் எதிர்காலம் பற்றிய மன்ற கூட்டம் 14ஆம் நாள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள், பல நாடுகளின் தூதாண்மை அதிகாரிகள், சிந்தனை கிடங்கு, செய்தி ஊடகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர், உலக ஆட்சிமுறை அமைப்பு முறை பற்றிய சீர்திருத்தம், பலதரப்புவாதம், சர்வதேச அறைகூவல்களைச் சமாளிப்பது ஆகிய அம்சங்கள் குறித்து விவாதித்தனர். ஐ.நாவை மையமாக கொண்ட சர்வதேச அமைப்பு முறையைப் பேணிக்காத்து, உலக ஆட்சி முறையை மேம்படுத்துவதை முன்னேற்ற வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஐ.நா ஒன்றியத்திற்கான சீன தூது குழுவின் தலைவர் சே ருன் கூறுகையில்,
மேலும் நியாயமான நேர்மையான உலக ஆட்சிமுறை அமைப்பு முறையையும் மனிதகுல பொது எதிர்கால சமூகத்தையும் கட்டியமைப்பதற்கு சீனத் திட்டம் மற்றும் முன்மொழிவு முக்கிய பங்காற்றியுள்ளது என்றார்.
