ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடும், எஸ்சிஓ பிளஸ் கூட்டமும் செப்டம்பர் முதல் நாள் கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேகில் நடைபெற்றன. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டங்களில் நிகழ்த்திய முக்கிய உரைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
இவ்வாண்டில் 25ஆம் ஆண்டு நிறைவை வரவேற்ற எஸ்சிஓ அமைப்பு, புதிய ரக சர்வதேச உறவுக்கான முன்மாதிரியாக மாறியுள்ளது. இந்த அமைப்பின் ஆரம்ப உறுப்பினரான சீனா, அதன் வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஞானம் மற்றும் ஆற்றலை வழங்கி வருகிறது.
வளர்ச்சி என்பது எல்லா பிரச்சினைகளின் தீர்வுக்கும் திறவுகோலாகும். நடப்பு எஸ்சிஓ உச்சிமாநாட்டில் சீனா பல ஒத்துழைப்பு நடவடிக்கைகளை முன்வைத்தது. தற்போதைய உலகம் பல நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில் பலதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் சீனாவின் செயல் மிக முக்கியமானது என்று கசகஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பானது, எஸ்சிஓ அமைப்பின் அடித்தளமாகும். தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகிய மூன்று தீய சக்திகளை கூட்டாக அழிப்பது, எஸ்சிஓ அமைப்பின் 4 பாதுகாப்பு மையங்களை கூடியவிரைவில் தொடங்குவது உள்ளிட்ட சீனாவின் முன்மொழிவுகள், பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேலும் பயனுள்ள முறையில் பேணிக்காக்கும் என கருதப்படுகிறது.
பல்வகை நாகரிகங்கள் மற்றும் கலாசாரங்கள், எஸ்சிஓ குடும்பத்தின் பெரிய தனிச்சிறப்பாகும். சீனா-எஸ்சிஓ அடிப்படை கல்வி ஒத்துழைப்பு மையத்தை உருவாக்குவது, கன்ஃபியூசியஸ் கழகம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் பரிமாற்றம் மற்றும் தொடர்புகளை வலுப்படுத்துவது போன்ற சீனாவின் முன்மொழிவுகளும் நடவடிக்கைகளும், எஸ்சிஓ உறுப்பு நாடுகளிடையில் நட்புறவுக்கான அடித்தளத்தை வலுப்படுத்தும்.
அசாதாரண 25 ஆண்டுகளைக் கடந்து சென்ற எஸ்சிஓ அமைப்பு தற்போது புதிய துவக்க புள்ளியில் நிற்கிறது. சீனா இக்குடும்பத்தின் உறுப்பின்களுடன் இணைந்து, 4 உலகளாவிய முன்மொழிவுகளைச் செயல்படுத்தி, உலகளாவிய ஆளுகையை மேம்படுத்துவதற்கும் மனிதகுலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தைக் கட்டமைப்பதற்கும் தொடர்ந்து ஞானம் மற்றும் திட்டங்களை வழங்கி வரும்.
