முதல் 7 மாதங்களில் சீன-எகிப்து வர்த்தகம் அதிகரிப்பு

கடந்த சில ஆண்டுகளில், எகிப்துக்கு சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு தொடர்ந்து இரட்டை இலக்க சதவீதத்தில் வளர்ச்சியைப் பராமரித்து வருகின்றது. சீனச் சுங்கதுறை வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில், எகிப்துக்கு சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 9519கோடி யுவான் இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 18.7விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது. இதில், ஏற்றுமதி மதிப்பு 17.5விழுக்காடும், இறக்குமதி மதிப்பு 49.4விழுக்காடும் வளர்ச்சி அடைந்தன.

எகிப்திலிருந்து சீனா விவசாயப் பொருட்களின் இறக்குமதி அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில், சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட எகிப்திய விவசாயப் பொருட்கள் அளவு கடந்த ஆண்டை விட 82.6விழுக்காடு அதிகரித்துள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

மேலும், இதே காலத்தில், எகிப்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட் சீனாவின் மின் இயந்திரப் பொருட்களின் 5153கோடி யுவானை எட்டியது. இது கடந்த ஆண்டை விட, 23.9விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது.

சீனாவும் எகிப்தும் தங்களின் தேவைகளை பூர்ச்சி செய்யும் வளங்களைக் கொண்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பை கூட்டாகக் கட்டமைப்பதில் ஒத்துழைப்பதன் மூலம் பரஸ்பர நன்மைகளையும் கூட்டு வெற்றியையும் அடைந்து வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author