நேபாளத்தைச் சென்றடைந்த சீனாவின் 2வது தொகுதியான அவசர உதவிப் பொருட்கள்

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் செப்டம்பர் 2ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், நேபாளத்துக்கு சீனா வழங்கிய 2வது தொகுதியான அவசர உதவிப் பொருட்கள் 1ஆம் நாள் பிற்பகல் அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டு நகரைச் சென்றடைந்தன. DNA சோதனைக்கான 5  நிபுணர்களும் சென்றடைந்தனர். மேலதிக அவசர உதவிப் பொருட்களையும், தொழில் நுட்ப ஆதரவையும் வழங்கிய சீனாவுக்கு நேபாளம் நன்றி தெரிவித்துள்ளது என்றார். மேலும், நேபாளத்தின் தேவைக்கிணங்க, பெய்லி பாலங்கள், நோய் தடுப்புப் பொருட்கள், அவசர தொலைத்தொடர்பு வசதிகள் உள்ளிட்ட 3வது அவசர உதவிப் பொருட்களை வழங்க சீனா ஏற்பாடு செய்து வருவதுடன், DNA சோதனைக்கான 2வது தொகுதியான நிபுணர்களை அனுப்பும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author