சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவி பெங் லீயுவான் அம்மையார், எகிப்தின் அரசுத் தலைவர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியின் மனைவி எந்திசார் அம்மையாருடன் உள்ளூர் நேரப்படி 2ஆம் நாள் முற்பகல், கெய்ரோ நகரில் சிறிய அளவிலான கைவினை பொருட்களின் கண்காட்சியைப் பார்வையிட்டார்.
சீன-எகிப்து நட்புறவு, மானுடவியல் பரிமாற்றம் ஆகியவை குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டனர். அப்போது பெங் லீயுவான் கூறுகையில், எகிப்து நீண்டகால வரலாறு மற்றும் ஆழ்ந்த பண்பாட்டுப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள், எகிப்து மக்களின் அறிவுத்திறமை மற்றும் தனிச்சிறப்புடைய அழகியலை வெளிப்படுத்தியுள்ளன என்றார். மேலும், இரு நாடுகளின் கலைஞர்கள் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பாரம்பரிய கைவினை நுட்பங்களின் பகிர்வு மற்றும் வெளிக்கொணர்வை வலுப்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
