தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள “தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் வழங்கப்படுமா?” என்பது முக்கிய அரசியல் கேள்வியாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்குவது அதிமுகவின் கடமை” எனக் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா கூறியதாவது: “அரசியலில் நம்பிக்கையே முக்கியம். அதன்படி கமலுக்கு சீட் வழங்கப்பட்டது. அதை வரவேற்கிறோம். அதே போல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய வார்த்தைகளையும் நிரூபிக்க வேண்டும். தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது அதிமுகவின் கடமை.” எனக்கூறினார்.
ராஜ்யசபா சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
