இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய இத்தாலியின் வரலாற்றில், மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை படைத்த தனது இத்தாலிய சகா ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, இந்த மைல்கல் சாதனையானது அவரது தலைமை மீது இத்தாலிய மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஓர் சான்றாகும் என்று கூறியுள்ளார்.
“போருக்குப் பிந்தைய இத்தாலியின் வரலாற்றில், மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்ற எனது நண்பர் பிரதமர் மெலோனிக்கு வாழ்த்துகள்,” என்று அவர் எழுதியுள்ளார்.
இத்தாலியின் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய மெலோனிக்கு மோடி வாழ்த்து
