சீன-வட கொரிய நட்புறவு கோபுரத்தில் அஞ்சலி செலுத்திய ஷிச்சின்பிங்கும் மனைவியும்

Estimated read time 1 min read

வட கொரியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், அவரது மனைவி பங் லீயுவனுடன் சேர்ந்து சீன-தென் கொரிய நட்புறவு கோப்புரத்தில், ஜூன் 9ஆம் நாள் முற்பகல், அஞ்சலி செலுத்தினார். அவர்களுடன் வட கொரியத் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும் அரசவையின் தலைவருமான கிம் ஜோங்-உன் மற்றும் அவரது மனைவி ரி சோல் ஜு ஆகிய இருவரும் கலந்துகொண்டனர்.

இந்நட்புறவு கோபுரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட சீன மக்கள் தொண்டர் படையினர்களும் வட கொரிய மக்களுடன் இணைந்து போராடி, தாயகத்தைக் கூட்டாக சீரமைத்த  வரலாற்று ஆவணங்கள், படங்கள், எண்ணெய் ஓவியங்கள் முதலியவை குறித்து கிம் ஜோங்-உன் ஷிச்சின்பிங்குடன் அறிமுகப்படுத்தினார்.

You May Also Like

More From Author