சீன தேசிய திரைப்படப் பணியகம் 21ஆம் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் திரைப்படத் தொழில் சங்கிலியின் உற்பத்தி மதிப்பு 81 ஆயிரத்து 725.9 கோடி யுவானை எட்டி, உலகின் முன்னணியில் உள்ளது.
இதில், தயாரிப்பு, வெளியீடு, திரையிடல் உள்ளிட்டவை தொடர்பான முக்கிய உற்பத்தி மதிப்பு 22 ஆயிரத்து 661.8 கோடி யுவானை எட்டியுள்ளது. திரைப்பட உபகரணங்கள் வாங்குதல், தொழில்நுட்ப சேவை உள்ளிட்டவை தொடர்பான நேரடியற்ற உற்பத்தி மதிப்பு 25 ஆயிரத்து 154.6 கோடி யுவானாகும். திரைப்படங்களைப் பார்ப்பதால் தூண்டப்பட்ட நுகர்வு, சில்லறை விற்பனை, திரைப்பட விழா மற்றும் கண்காட்சி பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி மதிப்பு 33 ஆயிரத்து 909.5 கோடி யுவானை எட்டியுள்ளது.
சீனாவின் சேவை நுகர்வு மேம்பாட்டையும், வெளிநாடுகளில் சீன கலாசாரத்தையும் ஊக்குவிப்பதற்கான ஆற்றலாக திரைப்படப் பொருளாதாரம் மாறியுள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
