சீனாவின் கப்பல் தயாரிப்பு முதலிய துறைகளின் மீதான புலனாய்வை தற்காலிகமாக நிறுத்துவதை அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. அமெரிக்கா, சீனாவுடன் நேர்மறைவான திசையை நோக்கிப் பயணித்து, கோலாலம்பூரில் நடைபெற்ற சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகக் கலந்தாய்வின் பொது கருத்துகளைச் செயல்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கை இதுவாகும் என்று சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் நவம்பர் 10ம் நாள் தெரிவித்தார்.
சீனக் கப்பல்கள் மீதான துறைமுகக் கட்டணம், சுமை தூக்கி உள்ளிட்ட சீனச் சாதனங்கள் மீதான வரி முதலியவற்றைத் தற்காலிகமாக நிறுத்துவது, அமெரிக்க அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதே நாள் தொடர்புடைய எதிர் நடவடிக்கைகளை சீனா நிறுத்தியது.
ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, சமத்துவ நிலையில் கலந்தாய்வு செய்யும் கோட்பாட்டின்படி, அமெரிக்காவுடன் இப்பிரச்சினை குறித்து தொடர்பு கொள்ள சீனா விரும்புகிறது. சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் தயாரிப்புச் சந்தையின் நியானமான போட்டி சூழலைக் கூட்டாகப் பேணிக்காத்து, சீன-அமெரிக்க ஒத்துழைப்புக்கும், உலக பொருளாதாரத்துக்கும் நிலைத்தன்மை மற்றும் உறுதித்தன்மையை இரு தரப்புகள் ஊட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
