ஹோர்முஸ் நீரிணையைக்கு வெளியே தடை செய்யப்பட்ட பகுதியை ஈரான் சில நாட்களுக்குள் அறிவிக்க உள்ளது. இப்பகுதியைக் கடந்து செல்ல முயலும் கப்பல்கள் ஈரானின் தடை பட்டியலில் சேர்க்கப்படும் என்று அந்நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சன் ரெசாய் தெரிவித்ததாக ஈரான் இஸ்லாமிய குடியரசு வானொலி மற்றும் தொலைகாட்சி நிலையம் 6ஆம் நாள் செய்தி வெளியிட்டது
ஹோர்முஸ் நீரிணை திறப்பு நிலையில் இருப்பது குறித்த அமரிக்க அரசுத் தலைவர் டிரம்பின் கூற்றுகள் பொய் என்று தெரிவித்தார்.“கள்ள கடத்தல்” முறையில் தங்கள் கப்பல்கள், தொடர்புடைய கடல் பரப்பைக் கடந்து செல்ல அமெரிக்கா முயனஅறு வருகிறது. இத்தகைய கப்பல்கள் பொதுவாக ஈரானால் தாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
பேச்சுவார்த்தையைத் தொடர அமெரிக்கா விரும்பினால், முதலில், ஈரானின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
