சீனச் சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு கண்காட்சியில் வணிக வாய்ப்புகள்

26ஆவது சீனச் சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு கண்காட்சி செப்டம்பர் 8ஆம் நாள் முதல் 11ஆம் நாள் வரை, சீனாவின் ஃபுச்சியன் மாநிலத்தின் சியாமன் நகரில் நடைபெறவுள்ளது. 129 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்தும் 30க்கும் மேலான சர்வதேச அமைப்புகளிலிருந்தும் சுமார் 1200 அரசு சார் நிறுவனங்கள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான பிரதிநிதிக் குழுக்கள் இதில் பங்கேற்க உள்ளன.

சீன வணிக துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர், 6ஆம் நாள் பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இப்பேச்சுவார்த்தை குறித்து அறிமுகப்படுத்தினார். இருவழி முதலீடுகளை விரிவாக்கி, உலகின் வளர்ச்சியைக் கூட்டாக விரைவபடுத்துதல் என்ற தலைப்பிலான இக்கண்காட்சியில், சீனாவுக்கு முதலீடு, சீனாவில் முதலீடு, சர்வதேச முதலீடு ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன. 2 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நடைபெற உள்ள இக்கண்காட்சியில் 14 தொழில்முறை சிறப்பு பொருட்காட்சி அரங்குகள் இடம்பெறுகின்றன. 46 வகை சிறப்பு கருப்பொருள் சார்ந்த நடவடிக்கைகளும் 52 திட்டப்பணிக்கான நடைமுறையாக்க காட்சிக்கான நிகழ்ச்சிகளும் இடம் பெற உள்ளன.

ஃபின்லாந்து, சௌதி அரேபியா ஆகிய 2 முதன்மை விருந்தினர் நாடுகளும், குவாங்தோ மற்றும் சின்காய் ஆகிய 2 முதன்மை விருந்தினர் மாநிலங்களும் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

You May Also Like

More From Author