சிலிண்டர் முன்பதிவுக்கான கால அவகாசம் 45-லிருந்து 25 நாட்களாக குறைப்பு!

Estimated read time 1 min read

கிராமப்புற LPG சிலிண்டர் முன்பதிவுக்கான கால அவகாசம் 45-லிருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவுக்கான 45 நாள் இடைவெளி 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுரேஷ் கோபி கூறுகையில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என அனைத்து வீட்டு எல்பிஜி நுகர்வோரும் 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். எல்பிஜி விநியோக நிலைமை மேம்பட்டு, நிலுவையில் இருந்த சிலிண்டர் முன்பதிவுகள் குறைந்ததால் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

You May Also Like

More From Author