பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ 2026 நிகழ்வில் உரையாற்றிய இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்தியா தங்களுடன் இணைந்து செயல்பட அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளார்.
“நாங்கள் மீண்டும் நிலவுக்கு பயணிக்கிறோம், அந்த நிலவின் மேற்பரப்பில் இந்தியா எங்கள் பக்கபலமாக இருக்க விரும்புகிறோம்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் நாசா அமைப்பு நிலவில் நிரந்தர மனித தளத்தை அமைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
ஆர்டெமிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ள நிலையில், இஸ்ரோவை (ISRO) இந்த நிலவு தள திட்டத்தில் இணைய நாசா முறைப்படி அழைத்துள்ளது.
இது எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மேற்கொள்ளப்பட உள்ள மனித விண்வெளி பயணங்களுக்கும் முக்கிய அடித்தளமாக அமையும்.
நிலவு தள திட்டத்திற்கு இஸ்ரோவுக்கு அமெரிக்க நாசா அழைப்பு
