சூழலியல் நாகரிகம் பற்றிய ஷிச்சின்பிங் சிந்தனை – அறிமுகம் எனும் புத்தகம் வெளியீடு

சூழலியல் நாகரிகம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனையை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறை, சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தொகுக்கப்பட்ட முக்கிய பாடநூலான சூழலியல் நாகரிகம் பற்றிய ஷிச்சின்பிங் சிந்தனை – அறிமுகம் எனும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட கட்சி மத்திய கமிட்டி, சீனத் தேசத்தின் நிலையான வளர்ச்சிக்கான தொலைநோக்கிலிருந்து தொடங்கி, சூழலியல் நாகரிக தத்துவத்தின் புத்தாக்கம், நடைமுறையின் புத்தாக்கம், அமைப்புமுறையின் புத்தாக்கம் ஆகியவற்றை மேம்படுத்தி, பல புதிய கருத்துகள், புதிய சிந்தனைகள் மற்றும் புதிய உத்திநோக்குகளை முன்வைத்து, சூழலியல் நாகரிகம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனையை உருவெடுத்துள்ளது.

சுமார் 1.7 லட்சம் எழுத்துக்களைக் கொண்ட இப்புத்தகம், சூழலியல் நாகரிகம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனையின் முக்கியத்துவம், அறிவியல் முறைமை, ஆன்மீக சாராம்சம், செழுமையான உள்ளடக்கம், நடைமுறை தேவைகள் ஆகியவற்றை விளக்கிக் கூறுகிறது.

You May Also Like

More From Author