ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கை

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஏப்ரல் 10ஆம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், வர்த்தகச் சவால்களைப் பயனுள்ள முறையில் சமாளிக்கும் வகையில் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்ட பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையை உறுதியாக பாதுகாத்து பலப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய, தொடரவல்ல, நிதானமான, பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் நம்பகமான உலகளாவிய விநியோகச் சங்கிலியை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

You May Also Like

More From Author