சீனச் சுங்கத் துறை தலைமை பணியகம் செப்டம்பர் 8ம் நாள் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 8 திங்களில், சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 17.6 விழுக்காடு அதிகரித்தது. இவற்றில் ஏற்றுமதி மதிப்பு 20.17 இலட்சம் கோடி யுவானை எட்டி, 14.6 விழுக்காடு அதிகரித்தது. இறக்குமதி மதிப்பு 14.61 இலட்சம் கோடி யுவானை எட்டி, 22 விழுக்காடு அதிகரித்தது.
இது குறித்து சுங்கத் துறை தலைமை பணியகத்தின் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு பிரிவின் தலைவர் லியு டாலியாங் கூறுகையில், சீனாவின் முழுமையான தொழில் முறைமை, வெளிநாட்டு வர்த்தகத்துக்கு அளித்த ஆதாரம், சீனாவின் புத்தாக்க ஆற்றல், வெளிநாட்டு வர்த்தகத்துக்கு ஊட்டிய சக்தி ஆகியவை இந்த தரவுகள் வெளிக்காட்டுகின்றன என்று தெரிவித்தார்.
இக்காலக்கட்டத்தில், ஏபெக் உள்ளிட்ட பொருளாதாரங்களுடனான ஏற்றுமதி இறக்குமதி தொகை, 20.89 இலட்சம் கோடி யுவானை எட்டி 22.2 விழுக்காடு அதிகரித்தது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கான ஏற்றுமதி இறக்குமதி தொகை, 2.81 இலட்சம் கோடி யுவானை எட்டி, 15.6 விழுக்காடு அதிகரித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
படம் VCG
