வெளிநாட்டு வர்த்தகத்தை நிலைப்படுத்துவதற்கானபுதிய கொள்கைகளை அறிமுகம் செய்வோம்
:சீன வணிக அமைச்ச்கம்
சீன வணிக அமைச்சகம் கொள்கைகளை வகுப்பதை மேலும்
வலுப்படுத்தி, வெளிநாட்டு வர்த்தகத்தை நிதானப்படுத்தும் புதிய கொள்கைகளை உரிய
நேரத்தில் வெளியிடும் என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹெ யொங்ச்சியன்
அக்டோபர் 16ஆம் நாள் தெரிவித்தார்.
இவ்வமைச்சகத்தின் அண்மைக்கால முக்கிய பணிகள்
குறித்து அவர் அறிமுகம் செய்து கூறுகையில், இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில், சீன
வெளிநாட்டு வர்த்தகம் அழுத்தத்தில் இருந்து முன்னேறி சென்று, நிலையான சூழ்நிலையில்
சீரான வளர்ச்சி அடைந்துள்ளது என்று
தெரிவித்தார். அடுத்த கட்டத்தில், கொள்கைகளின் பங்களிப்பை ஊக்குவிப்பது, வர்த்தக
ஊக்குவிப்பு நடவடிக்கை, வர்த்தக ஒத்துழைப்பை ஆழமாக்குதல் முதலிய துறைகளில் வணிக
அமைச்சகம் பணி மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.