மும்பையில் பிரதமர் நிகழ்ச்சி கூட்டத்தில் பாதுகாப்பு அத்துமீறல்: துப்பாக்கியுடன் பிடிபட்ட நபரால் பரபரப்பு  

Estimated read time 1 min read

மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த GFF 2026 நிகழ்விடத்தில், துப்பாக்கியுடன் நுழைந்த நபர் பிடிபட்ட சம்பவம் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ரோஹன் பாரேக் (24) என்ற நபர், பிரதமர் அலுவலகத்தின் (PMO) போலி அடையாள அட்டையை காட்டி பாதுகாப்பு பணியாளர்களை ஏமாற்றி உள்ளே நுழைய முயன்றுள்ளார்.
சோதனையின் போது அந்த ஐடி கார்டு போலியானது எனத் தெரியவந்தது.
மேலும், அவருடன் வந்த பாதுகாவலரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து இருவரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You May Also Like

More From Author