2025 சீன-பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வர்த்தகக் குறியீடுகள்

சீனச் சுங்கத் துறை தலைமை பணியகத்தால் தொகுக்கப்பட்ட 2025ம் ஆண்டு சீன-பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வர்த்தகக் குறியீடுகள், 8ம் நாள் நடைபெற்ற 26வது சீன சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டன.

இந்த குறியீடுகள் வர்த்தக அளவு, வர்த்தகக் கட்டமைப்பு, வர்த்தகப் புத்தாக்கம், வர்த்தக உள்ளார்ந்த ஆற்றல் ஆகிய 4 பகுதிகளால் உருவாக்கப்பட்டன. 2009 முதல் 2025ம் ஆண்டு வரை இவை தொடர்ந்து10 ஆண்டுகளாக அதிகரித்து,  334.14ஆக உயர்ந்தன.

சீனச் சுங்கத் துறை தலைமை பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2025ம் ஆண்டில் சீனாவுக்கும் இதர பிரிக்ஸ் நாடுகளுக்குமிடையில் ஏற்றுமதி இறக்குமதி பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை முதன்முறையாக 3 இலட்சத்தைத் தாண்டி, முந்தைய ஆண்டை விட 8.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஏற்றுமதி இறக்குமதி தொகை, 7.47 இலட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டை விட 3.4 விழுக்காடு அதிகரித்து, கடந்த ஆண்டில் சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் மொத்த மதிப்பில் 16.4 விழுக்காடு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author