பிரிட்டன் தலைமையமைச்சருடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார் ஷி ச்சின்பிங்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அழைப்பின் பேரில் செப்டம்பர் 8ஆம் நாளிரவு பிரிட்டன் தலைமையமைச்சர் ஆன்டி புர்ன்ஹமுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது புர்ன்ஹம் பிரிட்டன் தலைமையமைச்சராகப் பதவி ஏற்பதற்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், சீனாவும் பிரிட்டனும் பன்முக நெடுநோக்குக் கூட்டாளிகளாகும். இரு தரப்பும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, கருத்து வேற்றுமையைச் சமாளித்து, பரஸ்பர நலன்தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றார். இரு நாடுகள் அறிவியல் தொழில் நுட்பத் துறையில் வல்லரசுகளாகும். பல்வேறு துறைகளிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். சீன முதலீட்டாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை பிரிட்டன் முழுமையாக உத்தரவாதம் செய்ய விரும்புகிறேன் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார். இரு நாடுகள் ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும், உலகில் முக்கிய பொருளாதார நாடுகளாகும், ஐ.நா, 20 நாடுகள் குழு முதலிய கட்டுக்கோப்புக்களில் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சமமான ஒழுங்கான பல்துருவத்தன்மை உள்ள உலகையும் அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றத்தையும்யும் முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட.புர்ன்ஹம்  கூறுகையில், பிரிட்டன்-சீன நீண்டகால நிதானமான நெடுநோக்குக் கூட்டாளியுறவை உறுதியாக வளர்த்த பிரிட்டன் விரும்புகிறது. இரு தரப்புறவை வரலாற்றில் மிக உயர் நிலைக்கு மீட்டு, இரு நாட்டு மக்களுக்கு நலன் தர பிரிட்டன் விரும்புகிறது. தைவான் பிரச்சினையில் பிரிட்டனின் நிலைப்பாடு மாறவில்லை. சிட்சாங் கிர்லோங் மண்சரிவில் சீனாவின் மீட்புப்பணியையும் அவர் பாராட்டி, பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் குடிமக்களுக்கு வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவித்தார்.

You May Also Like

More From Author