இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியிலிருந்து விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, பிசிசிஐயின் துணைத் தலைவரான ராஜீவ் சுக்லா, அடுத்த தேர்தல் வரை தற்காலிகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
சமீபத்தில் 70 வயதை நிறைவு செய்த பின்னி, பிசிசிஐயின் வயது உச்சவரம்பு விதிகளின் காரணமாகவே இந்தப் பதவியிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட லோதா குழுவின் பரிந்துரைகளின்படி, பிசிசிஐ தலைவர் 70 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
இந்த விதி, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2025 இல் 75 ஆக உயர்த்தப்பட்டிருந்தாலும், அந்த மசோதா இன்னும் அமலுக்கு வரவில்லை.
இதனால், நடப்பு விதிகளின்படி பின்னி பதவியில் நீடிக்கத் தகுதியற்றவரானார்.