இந்தியத் தலைமையமைச்சர் மோடியுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

Estimated read time 1 min read

18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 12ஆம் நாள் பிற்பகல், இந்தியாவின் புது தில்லியில், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடத்தினார். இச்சந்திப்பின் போது அவர்கள் கருத்துகளை ஆழமாகப் பரிமாறிக் கொண்டதோடு, சீனாவும் இந்தியாவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்பது குறித்து முக்கிய ஒத்தக் கருத்துகளையும் எட்டினர். 

அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனா எப்போதுமே நெடுநோக்கு மற்றும் நீண்டகாலப் பார்வையுடன் சீன-இந்திய உறவை அணுகி வருகிறது என்றார். மேலும், இரு தரப்பும் “பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பின்” உயர்தர வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றி, உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழுமையை ஊக்குவிப்பதற்கு மேலதிக ஆக்கப்பூர்வமான ஆற்றலை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின் போது சீன-இந்திய உறவின் சீரான வளர்ச்சி குறித்து ஷி ச்சின்பிங் நான்கு முக்கியக் கருத்துகளை முன்வைத்தார். முதலாவதாக, புறநிலையான மற்றும் பகுத்தறிவுடன் கூடிய நெடுநோக்குப் புரிதலுடன், இரு நாட்டுறவின் வளர்ச்சித் திசையைச் சரிப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, ஒத்துழைப்புகளின் மூலம் கூட்டு வெற்றிப் பெறுவது என்ற கருத்துடன், ஒன்றை ஒன்று மேம்படுத்த வேண்டும். மூன்றாவதாக, ஒன்றுக்கொன்று மதிப்பு மற்றும் புரிந்துணர்வு கொண்ட அரசியல் அறிவுத்திறமையுடன் தடைகளை அகற்ற வேண்டும். நான்காவதாக, திறப்பு மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட பலதரப்பு ஒத்துழைப்புகளுடன் உலகத்துக்குப் பங்காற்ற வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

மோடி கூறுகையில், இந்தியா நெடுநோக்கு மற்றும் நீண்டகாலப் பார்வையுடன் இந்திய-சீன உறவை அணுகி வருவதாகத் தெரிவித்ததோடு, சீனாவுடனான கூட்டாளியாகத் திகழ விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், அந்தந்த நாட்டின் வளர்ச்சியை வாய்ப்பாகக் கொண்டு செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அதனைச் சவாலாகக் கொள்ள வேண்டாம் என்றும் கூறினார். தற்சார்புத் தூதாண்மைக் கொள்கையில் ஊன்றி நின்று வரும் இந்தியா, சீனாவுடனான உறவை எவ்வித மூன்றாவது தரப்பும் பாதிக்க அனுமதிக்காது என்றார். தைவான் பிரச்சினையிலும் ஷிச்சாங் தொடர்பான விவகாரங்களிலும் இந்தியக் கொள்கை மற்றும் நிலைப்பாடு மாறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், எந்தச் சக்தியும், இந்தியாவில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தியா அனுமதிக்காது என்றார். ஒன்றுக்கொன்றுடனான மதிப்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில், உயர்நிலைத் தொடர்பை நிலைநிறுத்தி, நலன் தரும் பரஸ்பர ஒத்துழைப்பை முன்னெடுத்து மனிதப் பரிமாற்றத்தை அதிகரித்து, இரு நாட்டுறவு மேலதிக வளர்ச்சிப் பெறுவதை முன்னேற்ற இந்தியா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதோடு, இரு தரப்பும் எல்லைப் பகுதியின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காக்க வேண்டும் எனக் கூறிய அவர் அடுத்த ஆண்டில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்தும் சீனாவுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author