அடிப்படை கல்வி குறித்து ஷிச்சின்பிங் உத்தரவு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், சமீபத்தில் அடிப்படை கல்வி குறித்து வெளியிட்ட உத்தரவில், கட்சியின் கல்வி கொள்கைகளை முழுமையாக செயல்படுத்தவும், கல்வி மூலம் நல்லொழுக்கத்தை உருவாக்கும் அடிப்படை பணியை மேற்கொள்ளவும், அடிப்படை கல்வியின் உயர்தர வளர்ச்சியை முன்னெடுக்கவும் வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேசிய அடிப்படை கல்விக்கான பணிக்கூட்டம் ஜுலை 22ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன துணை தலைமையமைச்சர் டிங் சுயேசியாங் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஷிச்சின்பிங்கின் உத்தரவைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், அரசியல், சிந்தனை மற்றும் வழிகாட்டல் தன்மை கொண்ட இந்த உத்தரவு, புதிய யுகத்திலும் புதிய பயணத்திலும் அடிப்படை கல்விக்கான பணியை நன்றாக மேற்கொள்வதற்கான திசையை வழங்கியுள்ளது என்றும், அனைத்து தரப்பினரும் இதனை ஆழமாக கற்றுகொண்டும், சிறப்பாக செயல்படுத்தவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author