உயர்தர வளர்ச்சியை இலக்காகக் கொள்ளும் சீனா உலகத்திற்கு வளர்ச்சி வாய்ப்புக்களைக் கொண்டு வரும்

14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் சீனப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை ஆய்வு செய்யும் முக்கிய ஜன்னலாக விளங்குகின்றன. இவ்விரு கூட்டத்தொடர்களும் உலக கவனத்தை ஈர்த்துள்ளன.

 

15ஆவது ஐந்தாண்டு வரைவு திட்டத்தில் உயர் தர வளர்ச்சியை விரைவுபடுத்துவது உள்ளிட்ட முக்கிய நெடுநோக்கு திட்டங்கள் குறித்து இவ்வாண்டின் அரசுப் பணியறிக்கையில் விளக்கி கூறப்பட்டுள்ளது. உயர்தர வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ள சீனா உலகத்திற்கு வளர்ச்சி வாய்ப்புக்களைக் கொண்டு வரும்.

 

நகரபுறங்களிலும் கிராமப்புறங்களிலும் மக்களின் வருமான அதிகரிப்பு திட்டத்தை வகுத்து, வணிக நுகர்வைத் தீவிரமாக்கி, மக்களுக்கு நன்மை அளிக்கும் சேவை நுகர்வு நடவடிக்கையை மேற்கொள்வது முதலியவற்றின் மூலம், சீனாவின் பெரிய சந்தை உலகம் கூட்டாகப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகளை அதிகமாக வழங்கும்.

மேலும், இப்பணியறிக்கையில் புதிய உந்து ஆற்றலை வளர்ப்பத்து, உயர் நிலை அறிவியல் தொழில் நுட்பத்தின் தற்சார்ப்பு மற்றும் வலிமை நனவாக்குவது ஆகியவை தெரிவிக்கப்பட்டன. இந்த வாரத்தில், பெய்ஜிங் மாநகரிலிருந்து வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின்படி சீனா புத்தாக்கமான வளர்ச்சியை தூண்டுவது உலகிற்கு நன்மை அளிக்கும் என்று சி என் என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு, 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டாகும். இவ்வாண்டில் சீனா கூடுதல் முயற்சி மேற்கொண்டு முன்னேற்றமடைந்து வருவதோடு, உலகத்திற்கு சுறுச்சுறுப்பான உயிர் ஆற்றலையும் புதிய வளர்ச்சி வாய்ப்புக்களையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author