சுங்கத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மொத்த வர்த்தக தொகை 86 ஆயிரத்து 265 கோடி யுவானை எட்டியது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 17.8 விழுக்காடு அதிகமாகும். இதில், இந்தியாவுக்கான சீனாவின் ஏற்றுமதித் தொகை 74 ஆயிரத்து 378 கோடி யுவானை எட்டி, 15.4 விழுக்காடு அதிகமாகும். இந்தியாவிலிருந்து சீனாவின் இறக்குமதித் தொகை 11 ஆயிரத்து 886 கோடி யுவானை எட்டி, 35.7 விழுக்காடு அதிகமாகும்.
இயந்திர மின் உற்பத்தி பொருளானது, இந்தியாவுக்கான சீனாவின் ஏற்றுமதிப் பொருட்களில் ஒரு முக்கிய பகுதியாகும். இந்தியாவின் உலோகத் தாதுகள் உள்ளிட்ட பாரம்பரிய வணிகப் பொருட்களின் இறக்குமதி அதிகரிப்பு வலுவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
