18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடத்தினார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவொ ஜியாகுவன் 14ஆம் நாள் கூறுகையில், சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கும் இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியும் தொடர்ந்து 3ஆண்டுகளாக வெற்றிகரமாக சந்திப்புகளை நடத்தியுள்ளனர். சீனாவும் இந்தியாவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்பது இச்சந்திப்பில் பெறப்பட்டுள்ள மிகவும் முக்கியமான ஒத்த கருத்து ஆகும் என்று தெரிவித்தார்.
உலகில் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட இரு நாடுகளாகவும், உலகளாவிய தெற்கு நாடுகளில் முக்கிய உறுப்புகளாகவும் திகழும் சீனாவும் இந்தியாவும், வளர்ச்சியை மிக முக்கிய இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். நட்பு பரிமாற்றத்தையும் பரஸ்பர ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்றும், இரு நாட்டு உறவுகளுக்கான பொது மக்களின் கருத்துகளின் அடிப்படையை மேம்படுத்த வேண்டும் என்றும், இரு நாட்டு தலைவர்களும் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் பிறதரப்பின் கவனங்களுக்கு சமநிலையான முறையில் தீர்வு காண வேண்டும் என்றும், இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளின் சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்றும் இரு நாட்டு தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தவிரவும், இரு நாடுகளிடையேயான முரண்பாடுகளையும் கருத்து வேற்றுமைகளையும் உரிய முறையில் கையாள வேண்டும் என்றும் இரு தரப்பினரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளதாக குவோ ஜியாகுவன் தெரிவித்தார்.
