செப்டம்பர் 12, 13ஆம் நாட்களில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அழைப்பையேற்று இந்தியாவில் நடைபெற்ற 18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்றார். புது தில்லியில் 24 மணிநேரங்களுக்குள் அவர் சுமார் 10 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சீன-இந்திய உறவுக்கும் வழிகாட்டினார். சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஷிச்சின்பிங்கின் இப்பயணம் குறித்து பேசுகையில், 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டில் தெற்குலக நாடுகளுக்கான மிக முக்கியமான தூதாண்மை நடவடிக்கை இதுவாகும் என்றும், பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பின் உயர் தர வளர்ச்சியை வழிநடத்தி தெற்குலகின் இணைப்பு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு உத்திப்பூர்வ முக்கியத்துவத்தை இது கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
சீன-இந்திய தலைவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இரு தரப்புறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியத் தரப்பு சீனாவுடன் இணைந்து இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துக்களை நன்றாகச் செயல்படுத்தி பிரதேசம் மற்றும் உலகின் அமைதிக்கும் செழுமைக்கும் குறிப்பிடத்தக்க பங்காற்ற வேண்டுமென விரும்புவதாக வாங்யி தெரிவித்தார்.
