பிரிக்ஸ் நாடுகளுடன் தொழில் நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தொழில்களிடையேயான இணைப்பை ஆழமாக்கி, திறமையான கட்டுமான திட்டங்களை மேற்கொண்டு, மேலும் உயர் தரமான, நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய மற்றும் தொடர்வல்ல வளர்ச்சியை நனவாக்க சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுவன் 14ஆம் நாள் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பல ஆண்டுகளாக, பிரிக்ஸ் நாடுகள் ஆக்கப்பூர்வமாக தொழில்மயமாக்க ஒத்துழைப்பை ஊக்குவித்து, புதிய தொழிற்துறை புரட்சிக் கூட்டாளி உறவுக்கான புத்தாக்க தளம், பிரிக்ஸ் நாடுகளின் தொழில்துறை திறமை மையம் உள்ளிட்ட மேடைகளை உருவாக்கி, பல நடைமுறைக்கு ஏற்ற சாதனைகளைப் பெற்றுள்ளன என்றும் தெரிவித்தார்.
