CIFTIS கண்காட்சியில் 1200க்கும் மேற்பட்ட புதிய சாதனைகள்

Estimated read time 0 min read

2026ஆம் ஆண்டு சீன சர்வதேச சேவைகள் வர்த்தகக் கண்காட்சி 13ஆம் நாள் பிற்பகல் நிறைவடைந்தது. இந்த கண்காட்சி நடைமுறை ஒத்துழைப்பு துறையில் நிறைந்த சாதனைகளைப் பெற்றுள்ளதோடு, அதன் சர்வதேச செல்வாக்கும் அதிகரித்து காணப்பட்டது.

இக்கண்காட்சியில் 1830க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்றன. 103 நிறுவனங்கள் 233 புதிய சாதனைகளை காட்சிப்படுத்தின. 134 அறிமுகம் மற்றும் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில், பெய்ஜிங்கில் முதலீடு என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் 36 முக்கிய திட்டங்கள் கையெழுத்தாகின. மேலும் இக்கண்காட்சியில் மொத்தமாக 7 துறைகளைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட சாதனைகள் எட்டப்பட்டதோடு, விரிவடைந்து வரும் திறப்பு கொள்கை, சீனச் சந்தை மீதான சர்வதேச கூட்டாளிகளின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author