சீனாவின் ஜியாங்சூ
மாநிலத்தின் தாய்சாங் நகரில், 560க்கும் மேலான ஜெர்மனி தொழில் நிறுவனங்கள் உள்ளன.
அவற்றில் 60 தொழில் நிறுவனங்கள், சில துறைகளில் உலகளவில் முன்னணியில் உள்ளன.
அண்மையில் இந்நகரில் சீன-ஜெர்மனி பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு பற்றிய
நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜெர்மனியின்
நார்-பிரெம்ஸ் ஏஜி நிறுவனத்தின் சீனப் பிரதேசத் தலைமை இயக்குநர் பீ குவாங்ஹொங்
கூறுகையில், சீனாவின் தொழில் துறை தயாரிப்பு உலகளவில் மிகச் சிறப்பாக உள்ளதாகவும்,
தொழில் நிறுவனம் பிரச்சினையைச் சந்தித்தால், சீன அரசு ஆக்கமுடன் உதவியளித்து
வருவதாகவும் குறிப்பிட்டதோடு, எங்களின் தொழில் நிறுவனம் சீரான வளர்ச்சியடைந்து வருகிறது
என்றும் கூறினார்.
ஜியாங்சூ யின்ஃபின்னிடி எரியாற்றல் தொழில் நுட்ப
நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மா காங்காய் கூறுகையில், பிற நாடுகளுடன் ஒப்பிடும்
போது, சீனாவின் முதலீட்டுச் சூழ்நிலை மேலும் நன்றாக உள்ளது. குறிப்பாக தாய்சாங்
நகரில், அதிகமான ஜெர்மனி நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆண்டில், எங்கள் நிறுவனத்தின்
சார்பில் திட-நிலை மின்கலன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நிறுவியுள்ளோம் என்றார்.
எதிர்காலம் பற்றி பீ குவாங்ஹொங் கூறுகையில், எதிர்காலத்தில் நாங்கள் செயற்கை நுண்ணறிவு, எண்ணியல்
உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்யவுள்ளோம். இது தொடர்பாக சில எண்ணியல்மயமாக்கத்
தொழில் நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
