சீனக் கம்யூனிஸட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், அண்மையில் பூஜியன் மாநிலத்தின் ஜாங்ஜோ 110 காவற்துறை குழுவினருக்குப் பதில் கடிதம் அனுப்பி, அவர்களுக்கு ஊக்கமளித்ததோடு எதிர்பார்ப்பையும் தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் இன்பத்தையும் நாட்டின் அமைதியையும் பேணிக்காப்பது சீன மக்கள் பொது காவற்துறையின் பொறுப்பாகும். பரந்த காவற்துறையினர்கள், மக்களுக்குச் சேவைபுரியும் ஆரம்பக் குறிக்கோளைக் கடைப்பிடித்து, சிறந்த பாரம்பரியத்தைப் பின்பற்றி, பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்புடன், பொது மக்களின் இன்னல்களைச் சமாளிக்கவும், நாட்டின் அமைதியைப் பேணிக்காக்கவும், கட்சி மற்றும் மக்களின் விசுவாச காவலராக இருக்கவும் வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
