சீனப் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் சமூகக் கமிட்டிக்கும் இடையேயான 21ஆவது வட்ட மேசைக் கூட்டம் 14ஆம் நாள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சீன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 37 பிரதிநிதிகள், வறுமை பிரச்சினையைச் சமாளித்து, சமூகத்தின் உள்ளடக்கும்தன்மையை ஊக்குவித்தல், சீன-ஐரோப்பிய வர்த்தகம் மற்றும் முதலீட்டின் தரத்தையும் பயன்களையும் மேம்படுத்துதல், மக்களே முதன்மை என்ற அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு ஆகிய கருப்பொட்களில் கருத்துக்களைப் பரிமாறிகொண்டனர். சீனப் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் தலைவர் வாங் தோங்ஃபேங் இதில் உரைநிகழ்த்துகையில்,
கூட்டாளி தகுநிலையை இரு தரப்பும் உறுதியாகப் பின்பற்றி, பல தரப்பு வாதத்தில் ஊன்றி நிற்க வேண்டும். மேலும், ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, பரஸ்பர நம்பிக்கையைக் கொண்டு, பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றி பெறக் கூடிய நியானமான எதிர்காலத்தைப் படைக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து, இரு தரப்புகளுக்கிடையில் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு தரப்புறவின் சீரான வளர்ச்சியை விரைவுபடுத்த சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.
