சீனாவின் பொது பாதுகாப்பு குறியீடு உலகில் முதலிடம்

உலகளாவிய பொது பாதுகாப்பு ஒத்துழைப்புக் கருத்தரங்கின் செய்தியாளர் கூட்டம் 10ஆம் நாள், சீனாவின் ஜியாங்சு மாநிலத்தின் லியென்யூகாங் நகரில் நடைபெற்றது.

2025-2026 உலகளாவிய பொது பாதுகாப்பு குறியீட்டு அறிக்கை இதில் வெளியிடப்பட்டது. இவ்வாண்டில் இந்த குறியீட்டிற்கான ஆராய்ச்சி தொடர்ந்து விரிவாகியுள்ளது. உலகளாவில் 82.73 விழுக்காட்டு மக்கள் தொகை கொண்ட 62 நாடுகள் இதில் அடங்கும். இவ்வறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டில், மேற்கூறிய 62 நாடுகளின் பொது பாதுகாப்பு குறியீட்டு எண் சராசரியாக 72.56 ஆகும்.

கடந்த ஆண்டை விட இது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. சீனா, சிங்கபூர், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகளின் குறியீட்டு எண் 80க்கு மேலாகும். 28 நாடுகளின் குறியீட்டு எண் 70 முதல் 79.99 வரையில் உள்ளது. இதர 24 நாடுகளின் குறியீட்டு எண் 70க்கும் கீழ் நிலையில் உள்ளது. சீனாவின் பொது பாதுகாப்பு குறியீட்டு எண் 84.62 ஆக, முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

You May Also Like

More From Author