பள்ளி மாணவர்கள் ஒழுங்காக முடி வெட்டி வராவிட்டால் மொட்டை அடியுங்கள், மாணவர்கள் பள்ளிக்கு வரும்பொழுது முறையாக முடி திருத்தம் செய்து வர வேண்டும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறினார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், அயன்ரெட்டியாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு துவக்கப் பள்ளியில், ‘ஆதிரை அறக்கட்டளை’ சார்பில் பள்ளி சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்டுவிழா இன்று (02.11.26) நடைபெற்றது. இதில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டினர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி மற்றும் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, “தகப்பன் சொல்றதை விட தாயார் சொல்றதை தான் அதிகமா கேக்குறாங்க.. இன்றைக்கு இருக்குற பசங்க முடி வெட்டுறதை பார்க்கும் போது அவ்ளோ கஷ்டமா இருக்கு.. பிள்ளைங்கள பார்க்கும் போது ரௌடிய பார்க்குற மாதிரி இருக்கு.. பெற்றோர்கள் ஏன் அனுமதிக்கிறீங்க. பள்ளி மாணவர்கள் ஒழுங்காக முடி வெட்டி வராவிட்டால் மொட்டை அடியுங்கள்.. மாணவர்கள் பள்ளிக்கு வரும்பொழுது முறையாக முடி திருத்தம் செய்து வர வேண்டும்” என்றார்.
