ஓமன் நாட்டின் தலைவர் சீனாவுக்கு வருகை

ஓமன் நாட்டின் சுல்தான் ஹைசைம் நவம்பர் முதல் நாள் விமானம் மூலம், பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். நாட்டின் சுல்தான் பதவி ஏற்ற பிறகு அவர் சீனாவில் பயணம் மேற்கொள்வது இது முதன்முறை. அது மட்டுமல்லாமல், சீன-ஓமன் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 48 ஆண்டுகளில், அந்நாட்டின் தலைவர் சீனாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.

அவர் 2 நாட்கள் பயணத்தின் போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அவருடன் பேச்சுவார்த்தையை நடத்தி, இரு நாட்டுறவு, பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் முதலியவை குறித்து ஆழமாக விவாதிக்கவுள்ளார். தவிரவும், சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் அவரைச் சந்தித்துரையாடவுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author