அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டோனி பிளிங்கன் 19ஆம் நாளன்று சீனப் பயணத்தை முடித்து கொண்டார்.
இப்பயணத்தில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் வெளியுறவுத் துறையின் உயர்நிலை அதிகாரிகளை அவர் சந்தித்தார். 2018ஆம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு சீனாவில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் மிகவும் உயர்நிலை அதிகாரி பிளிங்கன் என்று பல செய்தி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
தற்போதுள்ள சீன –அமெரிக்க உறவு, தூதரக உறவு நிறுவப்பட்ட பிறகு இல்லாத அளவில் மிகத் தாழ்ந்த நிலையில் சிக்கியுள்ளதையும் இது வெளிக்காட்டுகிறது.
சீன-அமெரிக்க உறவை மேம்படுத்துவதற்காக முதலில் அதன் அடிப்படை காரணத்தை அறிவது அவசியமானது. பிளிங்கனுடனான சந்திப்பில், சீன தரப்பு திறந்த மனதுடன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது.
சீனா குறித்த அமெரிக்காவின் தவறான புரிதல் மற்றும் தவறான கொள்கைகள் ஆகியவை தான், சீன-அமெரிக்க உறவின் தற்போதைய நிலைக்கு அடிப்படை காரணம். சீனாவை மிகவும் முக்கிய போட்டியாளராகவும் மிகவும் கடுமையான நீண்டகால சவாலாகவும் கருத்தில் கொண்டதே அந்த தவறான புரிதல் ஆகும்.
சீனாவுக்கு வரும் முன்பே பிளிங்கன் பலமுறை கூறுகையில்,
அமெரிக்காவும் சீனாவும், இரு தரப்பு உறவை நிர்வரிக்க உள்ளன. இது, அமெரிக்கா மற்றும் சீனாவைத் தவிர, உலகின் நலன்களுக்கும் பொருந்தியது என்று தெரிவித்தார். பாலி தீவில் இரு நாட்டுத் தலைவர்கள் எட்டிய கருத்தைச் செயல்படுத்த அமெரிக்கா பாடுபடும் என்றும் பிளிங்கன் தெளிவாகக் கூறினார்.
கடந்த காலத்தைப் பார்த்தால், சீன-அமெரிக்க உறவை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா அளித்த வாக்குறுதிகளுக்குப் பஞ்சமில்லை. அதை நடைமுறைக்கு கொண்டு வருவதில் தான் பிரச்சினையே உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, அமெரிக்கா இந்தமுறை சொல்லும் செயலும் ஒன்றாக இருந்து, நல்லெண்ணத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.