சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரத்துக்கான சீனத் தரப்பின் பொறுப்பாளரும் துணை தலைமை அமைச்சருமான ஹே லிஃபெங், இவ்விவகாரத்துக்கான அமெரிக்க தரப்பின் பொறுப்பாளரும் நிதி அமைச்சருமான பெஸ்ஸென்ட், வர்த்தகப் பிரதிநிதி க்ரீர் ஆகியோருடன் அமெரிக்காவின் நியூயார்க்கில் செப்டம்பர் 20ஆம் நாள் கலந்தாய்வு நடத்தினார். இரு தரப்பினரும் இருநாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துக்களை வழிகாட்டலாக கொண்டு, ஒன்றுக்கு ஒன்று மதிப்பு, சமாதான சகவாழ்வு, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடித்து, முந்தைய கலந்தாய்வுகளின் ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்துவது, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது போன்ற பொது அக்கறை உள்ள முக்கிய பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள் குறித்து மனம் திறந்து ஆழமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஏஐ தொடர்பான விவகாரம் பற்றியும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சீனா-அமெரிக்கா இடையே பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வு நடைபெற்றது
You May Also Like
விண்வெளியிலிருந்து வந்த நிலா விழா வாழ்த்துக்கள்
October 6, 2025
நவ்ரு வெளியுறவு அமைச்சர் சீன ஊடகக் குழுமத்துக்கு சிறப்புப் பேட்டி
January 27, 2024
