மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்` (எஸ்எஸ்சி), பல்வேறு ஷிஃப்டுகளில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான சமன்படுத்தும் (normalization) முறையில், புதிய சம சதவிகித (equipercentile) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நியாயமான மதிப்பீட்டை உறுதி செய்வதே இதன் நோக்கம் ஆகும்.
பல்வேறு ஷிஃப்டுகளில் நடத்தப்படும் தேர்வுகளில் வினாத்தாள்களின் கடினத்தன்மை வேறுபடும் என்பதால், அனைவருக்கும் நியாயமான மதிப்பெண்களை உறுதி செய்ய சமன்படுத்தும் முறை அவசியம் என்று எஸ்எஸ்சி தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியுள்ளது.
முன்பு, இந்தச் செயல்முறை அதிகபட்ச மதிப்பெண்கள் மற்றும் சராசரி மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
ஆனால், இப்போது அதைவிடத் துல்லியமான சம சதவிகித முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
எஸ்எஸ்சி தேர்வுகளில் சமத்துவத்தை உறுதி செய்ய புதிய விதிமுறை அறிமுகம்
