சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் தலைமையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டின் அரசியல் குழுக் கூட்டம் செப்டம்பர் 21ஆம் நாள் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியை விடா முயற்சியுடன் வலுப்படுத்துவது பற்றி ஆய்வு செய்யப்பட்டதோடு, கட்சியின் முழு அமர்வு நடைபெறும் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வு அக்டோபர் 26 முதல் 29ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது என்று இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியை விடா முயற்சியுடன் வலுப்படுத்துவது தொடர்பான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் முடிவு குறித்த ஆவணம் முழு அமர்வு கூட்டத்தில் பரிசீலனைக்காக வழங்கப்படும் என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
