2047ம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியா நம்பர் ஒன் நாடாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டுள்ள சாவர்க்கர் விளையாட்டு வளாகத் திறப்பு விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், வீரர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சி கிடைப்பதை உறுதி செய்யவும் மோடி அரசு கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
2036ம் ஆண்டு அகமதாபாத்தில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2047ஆம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவை முதலிடம் பிடிக்கச் செய்ய வேண்டும் என்ற இலக்கை பிரதமர் மோடி தங்களுக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அமித்ஷா கூறினார்.