அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 23 முதல் 25ஆம் நாள் அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது, அவர், டிரம்புடன் இரு நாட்டுறவு பற்றியும், உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய பிரச்சினைகள் பற்றியும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோஜியாகுன் 21ஆம் நாள் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில், அரசுத் தலைவர்களின் தூதாண்மைப் பரிமாற்றம் சீன-அமெரிக்க உறவுக்கு ஈடிணையற்ற நெடுநோக்கு வாய்ந்த வழிக்காட்டல் பங்கு உள்ளது. 6 மாதங்களில் இரு நாட்டுத் தலைவர்கள் பரஸ்பர பயணம் மேற்கொள்வதை நனவாக்குவது, வரலாற்று மற்றும் மைக்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமெரிக்காவுடன் இணைந்து, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கருத்து வேற்றுமையை உரிய முறையில் கட்டுப்படுத்தி, உலகளாவிய அமைதி, நிதானம் மற்றும் செழுமையை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
