சீன தேசிய உணவு மற்றும் வியூக இருப்பு நிர்வாகப் பணியகத்தின் தலைவர் லியூ ஹுவான்சின் 21ஆம் நாள் கூறுகையில், தற்போது, எல்நினோ வானிலை, புவிசார் மோதல் முதலியவற்றால் பாதிக்கப்பட்டு, சர்வதேசத் தானியச் சந்தையில் ஒழுங்கற்ற ஏற்றத்தாழ்வு காணப்பட்டுள்ளது. ஆனால், சீனாவின் தானியச் சந்தை மொத்தமாக நிதானமான முறையில் இயங்குகிறது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 2025ஆம் ஆண்டு சீனாவின் தானிய விளைச்சல் 71.5 கோடி டன்னை எட்டி, நபர்வாரி தானிய இருப்பு 500 கிலோகிராமுக்கும் மேல் உள்ளது. உலக சராசரி நிலையை விட இது அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார். தவிரவும், கையிருப்பைப் பார்த்தால், சீனாவின் தானிய கையிருப்பு முறைமை மேம்படுத்தப்பட்டுள்ளது. பதனீட்டுத் துறையைப் பார்த்தால், சீனாவின் தானிய தொழில் சங்கிலி முழுமையாக உள்ளது. தற்போது, நாடளவில் பல்வேறு வகை தானிய பதனீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 24 ஆயிரம் ஆகும். கோதுமை மாவு, அரிசி, சமையல் எண்ணெய் முதலிய உற்பத்திப் பொருட்களின் பதனீட்டுத் திறன் வலுவாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
படம்:VCG
