கொலம்பியா முழுவதிலும் 180 நாட்களாக போர் நிறுத்தம் மேற்கொள்ளும் என்று அந்நாட்டு அரசும், கொலம்பியா தேசிய இன விடுதலை படையும் கூட்டாக அறிவித்தன.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில்,
பன்முகங்களிலும் அமைதியை நனவாக்குவது கொலம்பியா மக்களின் விருப்பமாகும். லாத்தின் அமெரிக்க பிரதேசத்தின் நிதானத்திற்கும் வளர்ச்சிக்கும் துணை புரியும் இந்நடவடிக்கை சர்வதேச வரவேற்பைப் பெறும். கொலம்பியா அமைதி போக்கிற்கு சீனா உறுதியாக ஆதரவு அளித்து வருகின்றது. அமைதியை முன்னேற்றுவதற்கு பல்வேறு தரப்புகள் செய்த முயற்சிக்கு சீனா பாராட்டு தெரிவிக்கின்றது என்றார்.