அமெரிக்க இளம் மாணவர்களுக்கு ஷி ச்சின்பிங் விருப்பம்

அண்மையில் ஹார்வர்ட் உள்ளிட்ட அமெரிக்காவின் 10 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் நூறு மாணவர்கள் சீனாவில் நடைபெற்ற இரு நாட்டுப் பரிமாற்ற நடவடிக்கையில் கலந்து கொண்ட பின்னர், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கிற்குக் கடிதம் எழுதி, இரு நாட்டு நட்புறவை முன்னேற்றுவதில் பங்காற்ற விரும்புவதாகத் தெரிவித்தனர். அவர்களுக்கு தலைவர் ஷி ச்சின்பிங் அனுப்பிய பதில் கடிதத்தில், சீன நாகரிகத்தின் மீது நீங்கள் காட்டிய விருப்பத்தையும் பசிபிக் பெருங்கடலைக் கடந்து நட்புறவுத் தூதராகச் செயல்படும் உங்கள் விருப்பத்தையும் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன் என்று தெரிவித்தார்.

இக்கடிதத்தில், இரு நாடுகளின் இளைஞர்கள் சேர்ந்து சீன-அமெரிக்க நட்பு ஒத்தழைப்புறவை போற்றி பாதுகாத்து வளர்ச்சியுறச் செய்ய வேண்டும் என்றும், அழகான உலகைக் கட்டியமைப்பதற்கு இளைஞர்கள் பங்கு ஆற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

You May Also Like

More From Author